Advertisement

ஆக்லாந்தில் தியாகராஜ ஆராதனை

நியூசிலாந்து கர்நாடிக் சங்கத்தின் சார்பில் சென்ற சனிக்கிழமையன்று தியாகராஜ ஆராதனை மிகச்சிறப்பாக பிக்ளிங் சென்டரில் கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு ஸ்ரீ விநாயகருக்கும் மற்றும் சத்குரு தியாகராஜருக்கும் பூஜை மற்றும் ஆரத்தியுடன் ஆராதனை தொடங்கியது. ஆக்லாந்தில் உள்ள இசை அறிஞர்கள், இசை ஆசிரியர்கள் குறிப்பாக அவர்களிடம் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் பலர் சேர்ந்து கொண்டு தியாகராஜரின் சௌராஷ்ட்ரா ராகத்தில் அமைந்த மகா கணபதிம் என்ற கீர்த்தனையை பாடி பின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை மனமுருகி பாடி ஸ்ரீ தியாகராஜருக்கு அஞ்சலி செய்தனர். பின்னர் வ‌ந்திருந்த அனைவ‌ருக்கும் மகா ப்ர‌சாதம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து பிறகு வாய்ப்பாட்டு, வயலின், வீணை, புல்லாங்குழல் மற்றும் மிருதங்கம் கற்கும் மாணவ மாணவிகளின் கச்சேரி அமைந்தது. அவர்களை தொடர்ந்து இசை கற்பிக்கும் ஆசிரியர்களின் கச்சேரி தனி தனியாகவும் ஒரு குழுவாகவும் பாடி ஸ்ரீ ஸத்குருவிற்கு இசையால் அஞ்சலி செலுத்தினர். அரங்கில் இசை கலைஞர்களின் இசைக்கச்சேரிகள் செவிகளை குளிரச் செய்‌தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆராதனை விழாவில் கலந்து கொண்டனர். பின் மங்களத்துடன் இசை நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. 2 மணியளவில் நிறைவு பெற்றதும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.


- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்



Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement