Advertisement

லேகோஸ், நைஜீரியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் இந்திய பள்ளி மாணவர்கள் முதலிடம்

, நைஜீரியா, லேகோஸ் மாநில ஜிம்னாஸ்டிக்ஸ் க்ளப் சார்பில் நடந்த ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் இந்தியன் லேங்குவேஜ் ஸ்கூல் (ஐ.எல்.எஸ்.) மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

35 ஆண்டுகளாக கே.ஜி. முதல் 12 ம் வகுப்பு வரை இந்திய பாடத்திட்டம் இஆகுஉ முறையில் இயங்கி வருகிறது ஐ.எல்.எஸ். பள்ளி. இப்பள்ளி மாணவர்கள் 11 பேர் இப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு கடந்த ஒன்றரை மாதங்களாக பயிற்சியில் ஈடுபட்டனர்.

கடந்த சனிக்கிழமை நடந்த போட்டியில் தரை, வால்ட் மற்றும் ட்ராம்போலின் வகைகளில் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் பங்கேற்றனர். தனிச்சையாகவும் முன்று பேர் கொண்ட குழுக்களாகவும் கலந்து கொண்டனர். லேகோஸிலிருந்து 7 பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுத்துக்கொண்ட பள்ளி மாணவர்கள் சுமார் 80 பேர் இப்போட்டியில் தங்களின் சாகசத்தை காட்டினர். பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தது அவர்களின் கைதட்டலிருந்து தெரிந்தது. ஐ.எல்.எஸ். மற்றும் செயின்ட் சேவியர்ஸ் மாணவிகளுக்கு இடையே பெரும் போட்டி நிலவியது.

இறுதியில் ஐ.எல். எஸ். மாணவ மாணவிகள் 11 பேரும் தனித்தும் கூட்டு மதிப்பெண் பெற்று குழுவாகவும் அனைத்து வகை (தரை, வால்ட் மற்றும் ட்ராம்போலின் ) மற்றும் அனைத்து நிலையிலும் (முதல் மற்றும் இரண்டாம்) தங்களுக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பள்ளி ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளர் அலுகோ மைக்கேல் ஒலடிமேஜி (நைஜீரியர்) மிகவும் சிறப்பாக இம்மாணவச் செல்வங்களை பழக்கியிருக்கிறார் என்றே கூற வேண்டும். வெற்றி பெற்ற மாணவர்கள் இந்தியாவின் பஞ்சாப் முதல் கோயமுத்தூர் வரை சேர்ந்தவர்கள் ஆவார்கள் என்பது சிறப்பம்சமாகும். அவர்கள் சாதனா பாலாஜி, கனிஷ்கா கோவிந்தராஜன், மயூரேஷ் ஆனந்தன், கௌதம் கோவிந்தராஜன், மௌலி பேல், முஸ்கான் பேல், சுஹாஸ் பஞ்சாபி, தேஜஸ் மிஸ்த்ரி, ஆரவ் ஷர்மா, வாஹினூர் சந்து மற்றும் க்லெவீன் மார்க் அல்மேடா.

இதுவரை வெளி நாட்டு மாணவர்களுக்கு இந்த மாநில போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கியது இல்லை. மார்ச் 10 ம் தேதி, சனிக்கிழமை அன்று நடந்த போட்டியில் கலந்து கொண்டதே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்



Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement