Advertisement

லேகோஸ், நைஜீரியாவில் சர்வதேச மகளிர் தினம்

: நைஜீரியா தமிழ் சங்கத்தின் தமிழ் அஸோஸியேஷன் ஆப் நைஜீரியா சார்பில் சர்வதேச மகளிர் தினம் மனதுக்கு உகந்த வகையில் கொண்டாடப்பட்டது.

சிந்தையில் உதித்த ஒரு நல்நோக்கம் உருவம் பெற்று செயலில் முடிவதே சிறந்த செயல் என்பதை அனைவரும் அறிவார்கள். அதை மானிடப் பிறவியில் அரிதான மகளிர் ஒன்று கூடி செய்ய முனைந்தது நைஜீரியா தமிழ் சங்கத்தின் சர்வதேச மகளிர் தின விழாவில் காண முடிந்தது.

நாம் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதாது, நம்மை சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற தாயுள்ளம் கொண்ட பெண்களின் உதவிக்கரம் சற்றே பெரிதாகி மகளிர் தினம் எளியோருக்கு உதவும் தொண்டு நிகழ்ச்சியாக மாறி அனைவரையும் நெகிழ வைத்தது. மார்ச் 9 ம் தேதி காலை 10 - 12 மணி வரை நடந்த நிகழ்வில் நைஜீரியா வாழ் தமிழ் பெண்கள் தங்களால் இயன்றவற்றை பணமாகவும், ஆடை, உணவு, மருந்து மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு பொருட்களை கொடுத்து பெண்கள் தினத்தை பயனுள்ள அர்த்தமுள்ள விழாவாக மாற்றி கொண்டாடினர்.

மார்ச் 18 வரை பொருட்களை சேமிக்க வழி செய்யப்பட்துள்ளது. பின்பு இதை பிரித்து லேகோஸில் இருக்கும் பள்ளிகள், ஆதரவற்ற இல்லங்களில் கொண்டு சேர்க்கப்பட உள்ளது.

- நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement