Advertisement

பஹ்ரைன் உணவுத் திருவிழா – 2018




பஹ்ரைன் மனாமா: பஹ்ரைனில் பிப்ரவரி 22ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் இயற்கை உணவு, ஐரோப்பிய, ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் இந்திய உணவுகள் பரிமாறப்பட்டன. பல்வேறு நாடுகளின் கலை நிகழ்சிகளும் இதில் நிகழ்த்தப்பட்டது. சமையல் மற்றும் உணவகம் தொடர்பான பல்வேறு பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.





பல்வேறு நாடுகளை சேர்ந்த சமையல் கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் மக்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டு பல்வேறு நாடுகளின் கலாசார உணவு வகைகளை சுவைத்து மகிழ்ந்தனர். சிறந்த உணவு வகைகளுக்கு பரிசுகளின் விருதுகளும் வழங்கப்பட்டது.





- நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement