Advertisement

குவைத், பாவேந்தர் கழக மகளீர் தின சிறப்பு நிகழ்ச்சி

குவைத், பாவேந்தர் கழகத்தின் “களம்-64” மாதாந்திர நிகழ்வு, மகளீர் தின சிறப்பு நிகழ்ச்சியாக மங்காஃப் பாவேந்தர் அரங்கில் கடந்த 02-03-2018 வெள்ளி மாலை 5.00 மணிக்குத் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. திரு. வாசு இராமநாதன் (பொதுச்செயலாளர்) நிகழ்வை மிகச்சிறந்த முறையில் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர் பொறியாளர் மணிவாசகம் அவர்கள் தலைமை ஏற்க, பொறியாளர் காந்தி மற்றும் திரு. நடராஜன் (தலைவர்) இருவரும் முன்னிலை வகிக்க விழா இனிதே தொடங்கியது.

திருமதி. மஞ்சுளா, திருமதி பிரியா கண்ணன் - திருமதி. கயல்விழி ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்தும், திருமதி. மஞ்சுளா, அவர்கள் களப் பாடலும் பாடினார்கள். களத்துமேடு - குழந்தைகள் நிகிஷாஸ்ரீ, தனுஸ்ரீ - நிதர்ஷா கொண்டு அசத்த, களைகட்டியது களம். கவிதைச்சிறகு – 'பைந்தமிழ் செம்மல்' புலவர் அழகர் சண்முகம் மற்றும் கவிஞர். தாரா, இருவரும் சிறப்பான மரபு கவிதைகளை படைத்தனர். அடுத்த நிழ்வாக, சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட பொறியாளர் சாந்தகுமார், திரு மணிகண்டன் (தலைவர், மக்கள் மறுமலர்ச்சிப் பேரவை). திரு. கவிசெய் சேகர் (நிறுவனர், தெய்வ சேக்கிழார் பேரவை) ஆகியோர் கலந்து கொண்டு அவர்கள் பாவேந்தர் கழகத்தின் செயல்பாடுகளையும், தமிழ்த்தொண்டுகளையும், கலைநிகழ்ச்சிகளையும் வெகுவாகப் பாராட்டினர். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் 2018 ஆம் ஆண்டின் தினசரி நாள்காட்டி வழங்கப்பட்டது.

இனிதினும் இனிது: மகளீர் தின சிறப்பு நிகழ்ச்சிக்காக சிறப்பு பட்டிமன்றம் நடந்தேறியது தலைப்பு: குடும்ப பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்பவர்கள் கிராமத்து பெண்களா! நகரத்து பெண்களா!! அதில் நடுவராக கவிஞர் சிவமணி அவர்களும் கிராமத்து பெண்களே! என்று பொறியாளர் பத்மநாதன் மற்றும் திருமதி. பிரியா கண்ணன் இருவரும் சிறப்பாக வாதிட்டனர் அதுபோல நகரத்து பெண்களே!! என்று கவிஞர் அபுதாகீர் மற்றும் திருமதி அம்புஜலஷ்மி இருவரும் எதிர் வாதம் செய்தனர் இப்படியாக பட்டிமன்றம் மிகக் சிறப்பாகவும், நகைச்சுவையோடும் கொண்டு சென்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப்பண்ணுடன் சுவையான இரவு விருந்தை திருமதி மஞ்சுளா துரைசாமி வழங்க, விழா இனிதே நிறைவடைந்தது.


-தினமலர் வாசகர் வாசு ராமநாதன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement