Advertisement

லண்டனில் கும்பாபிஷேக விழா

லண்டன் : லண்டன் ஸ்ரீ மகாலட்சுமி ஆலயத்தில் நூதன ராஜகோபுர மகாகும்பாபிஷேக விழா பிப்ரவரி 04 ம் தேதி நடைபெற்றது. இதற்கான பூர்வாங்க பூஜைகள், சிறப்பு யாகங்கள் ஆகியன பிப்ரவரி 02 ம் தேதி துவங்கின. பிப்ரவரி 03 ம் தேதி ராஜகோபுர கலச ஸ்பானம் நடைபெற்றது. பிப்ரவரி 04 ம் தேதி காலை 11 மணி முதல் 12 வரை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
அன்று காலை சுப்ரபாதத்துடன் விழா துவங்கியது. அதுனைத் தொடர்ந்து காலசாந்தி, பிரதான ஹோமங்கள், மகா பூர்ணஹூதி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு, ராஜகோபுர கலசங்களுக்கு புனிநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அன்று மாலை லட்சுமி நாராயணர் திருக்கல்யாணம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement