Advertisement

சுவிட்சர்லாந்தில் தைப்பூச விழா

சுவிட்சர்லாந்தின் லாசன்னே பகுதியில் உள்ள இந்துக் கோயிலில் தைப்பூச விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தைப்பூச விழாவை முன்னிட்டு வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் காணிக்கையாக எடுத்து வந்த பால் குடங்களைக் கொண்டு முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், காவடிகள் ஏந்தியும் வந்தும் முருகப்பெருமானை வழிபட்டனர். சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் ஆலய வலம் வந்த முருகப் பெருமானை பெருந்திரளான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement