Advertisement

அபுதாபி அய்மான் சங்க 37-ஆம் ஆண்டு விழா


​அபுதாபி அய்மான் சங்க 37-ம் ஆண்டு விழா , அமீரக சாதனைத் தமிழர் விருது வழங்கும் விழா , அய்மான் ஆவணப்பட வெளியீடு ஆகிய முப்பெரும் விழா ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் அரங்கில் 23/02/2018 வியாழன் மாலை மிக சிறப்புடன் நடைபெற்றது .


அய்மான் சங்க தலைவர் ஹாஜி ஜெ.ஷம்சுத்தீன் தலைமை வகித்தார் . பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் நிர்வாக இயக்குனர் ஹாஜி ஜெ.அப்துல் ஹமீது மரைக்காயர் முன்னிலை வகித்தார் .இத்ரீஸ் மரைக்காயர் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார் .அய்மான் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சி.ஹமீது வரவேற்புரையாற்றினார்.அய்மான் சங்க மார்க்கத் துறை செயலாளர் மவ்லவி ஹுசைன் மக்கி மஹ்லரி , முத்து அஹமது மஹ்லரி ஆகியோர்ஒருங்கிணைப்பில் மதரஸா மாணவர்கள் பங்கேற்ற அய்மான் பைத்துல்மால் குறித்த விழிப்புணர்வு நாடக வடிவிலான நிகழ்ச்சி நடைபெற்றது .அய்மான் சங்க துணை பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.அய்மான் சங்க முன்னாள் தலைவரும் , ஆலோசகருமான கீழக்கரை டவுண் காஜி ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீகி, சமவுரிமை இதழ் ஆசிரியர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா, அபுதாபி தமிழ்ச் சங்கம் ரெஜினால்ட், துபை ஈமான் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், அமீரக தமிழ் மன்றத் தலைவர் சிவக்குமார் , அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் ஜெ.அரபாத் அலி , பாரதி நட்புக்காக ராமகிருஷ்ணன் ஆகியோர் அய்மான் சங்க பணிகளை நினைவுகூர்ந்து வாழ்த்தி பேசினர்.அய்மான் ஆவணப்படத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டார் .பின்னர் ஆவணப்படம் அரங்கில் திரையிடப்பட்டது .அமீரக சாதனைத் தமிழர் விருதை தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் கரங்களால் பெற்ற பின் நோபிள் குழும தலைவர் எம்.ஷாஹுல் ஹமீது அவர்கள் உணர்ச்சி ததும்ப ஏற்புரையாற்றினார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் விழா பேருரையாற்றினார். அவர் தனது உரையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். சமீபத்தில் பேசிய பிரதமர் சமஸ்கிருத மொழியை விட மிகவும் பழமையானது தமிழ் மொழி என குறிப்பிட்டார்.இதுவரை எந்த பிரதமரும் தெரிவிக்காத கருத்தை அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்திய பிரதமர்களாக இருந்த ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் தெரிவிக்க தயங்கிய கருத்தை மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் வரவேற்கத்தக்கது.அவருடன் கொளகை ரீதியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழ் மொழியின் சிறப்பை தனது உரையின் மூலம் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.மேலும் அரபி மற்றும் தமிழ் மொழிக்கு இடையிலான தொடர்பு குறித்தும் தெரிவித்தார்.வரும் சட்டமன்ற தேர்தலில் அபுதாபி அய்மான் சங்க துணைப் பொதுச்செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என உறுதியளித்தார்.அய்மான் சங்க செயலாளர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி நன்றி கூறினார் .துபை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் பைஜூர் ரஹ்மான், முதுவை ஹிதாயத், தேவிபட்டிணம் நிஜாம், கூத்தாநல்லூர் பைரோஸ் கான திருச்சி எம்.ஏ.எம்.கல்லூரி குழும தலைவர் நிஜாம், அய்மான் மகளிர் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் சிட்டிசன் அப்துல் மஜீது , , திருச்சி பைஜூர் ரஹ்மான் , காயல் நல மன்றம் ஷேக்னா , எஸ்.எம்.ஜி. குழும மேலாளர் அரிக்கேசவநல்லூர் எஸ்.எஸ்.மீரான் , இந்திய சமூகம் மற்றும் கலாச்சார மையத்தின் முன்னாள் தலைவர் திரு. நடராஜன் , முஸ்லிம் கல்வி இயக்க தலைவர் மாலிக் மற்றும்​ ​ஈமான் சங்கம் ​,அமீரக காயிதே மில்லத் பேரவை , ​​ அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபை , மவ்லிது கமிட்டி, அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் , லைலத்துல் கத்ர் கமிட்டி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.அய்மான் சங்க ஆரம்ப கால உறுப்பினரும் , அய்மான் குர்ஆன் மஜ்லிஸ் ஆசிரியருமான நஜ்முத்தீன் காக்க அவர்கள் தாயகம் செல்ல இருப்பதால் அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது .அய்மான் சங்க ஆவணப்படத்தை சிறப்பான முறையில் வடிவமைத்து தந்த எடிட்டர் அலாவுதீன் அவர்களுக்கும் , ஆவணப்படம் முழுமைபெற பெரிதும் பணியாற்றிய பூந்தை ஹாஜா அவர்களுக்கும் நிகழ்ச்சியில் நன்றி தெரிவிக்கப்பட்டது. பூந்தை ஹாஜா அவர்களின் சிறப்பு பணிகளை பாராட்டி பனியால் அப்துல் ஹமீது மரைக்காயர் மடல் வழங்கி சிறப்பித்தார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்மான் சங்க பொருளாளர் கீழை ஜமாலுதீன் நிர்வாக குழு உறுப்பினர்கள் :- பூந்தை ஹாஜா , ஆவை.அன்சாரி , பசுபதிகோவில் சாதிக் , நிஜாம் மொகிதீன் , ஃபிர்தவ்ஸ் பாஷா , ரிபாயி , காயல் ஷேக், காயல் லெப்பை தம்பி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.துபை , அல் அய்ன் , ஷார்ஜா , ராசல் கைமா மண்டலங்களிலிருந்தும் மக்கள் திரளாக பங்கேற்றனர்.--- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement