Advertisement

தெற்கு சூடானில் கபடி போட்டி

தெற்கு சூடானில் கபடி போட்டி முதல் முறை ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக புத்தான்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தெற்கு சூடான் பலோச் எண்ணெய் வயல் பகுதியில் தமிழ் நண்பர்கள் குழு மற்றும் வைகை நண்பர்கள் குழு சார்பில் முதல் முறை ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக நிதி திரட்ட நடத்தப்பட்டது . திரு.ரமேஷ் தலைமையில் ஏழு வேங்கைகள் மதுரை, திரு இசக்கி தனிமையில் தமிழ் புலிகள் நெல்லை,இலங்கை தமிழ்செல்வன் தலைமையில் ஈழவேந்தன், வில்லிவாக்கம் டில்லிபாபு தலைமையில் சென்னை சூப்பர் கில்லி ஆகிய அணிகள் களம் ஆடின. தமிழ் நண்பர்கள் குழு மற்றும் வைகை நண்பர்கள் குழு தலா ரூ 500, விளையாட்டு அணி வீரர்கள் தலா ரூ 750 கொடுத்தனர். சென்னை சூப்பர் கில்லி ,ஈழவேந்தன்ஆகிய அணிகள் முதல் மற்றும் இரண்டாம் நிலைக்கு தேர்வாயின.

- தினமலர் வாசகர் வடக்கன்குளம் தமிழரசு

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement