Advertisement

திருகோணமலை மாணவர்களுக்கு நல உதவிகள்

திருகோணமலை: திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், வெருகல் பிரிவில் உள்ள உப்பூரல் மற்றும் சீனன்வெளி பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த இரண்டு ஆரம்ப பாடசாலகள் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் அமைந்துள்ளது. இந்த குழந்தைகளில் பெரும்பாலானவை ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது அவதானிக்கப்பட்டது. இந்தக் குறைபாடு நீங்குவதட்கு அவசர தலையீடு தேவை என உணரப்பட்டது.

தொடர்ந்து, “உதவும்கரங்கள்” செயல் திட்டத்தின் பயனாளிகளுடன் மூதூர் கிழக்கு பிரிவில் உள்ள பள்ளிக்குடியிருப்பு இந்து கல்லூரி பாடசாலையில் ஓன்று கூடல் நடைபெ ற்றது. இந்த உதவும்கரங்கள் செயல் திட்டத்தில், 400 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது; மாணவர்களுக்கான 110 சைக்கிள்கள் வழங்கப்பட்டது; ஆயிரம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது; 400 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது


இந்த உதவிகள் சர்வதேச ரோட்டரி சம்மேளனத்தினத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்டது. இந்த ஓன்று கூடலில் வாழ்வாதார உதவிகள் பெற்றவர்கள் கலந்து கொண்டார்கள். இதன் போது. ரோட்டரி கழகத்தின் உதவும்கரங்கள் செயற்றிட்டத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்கள்.


- நமது செய்தியாளர் ஞான குணாளன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement