Advertisement

பஹ்ரைனில் காங்கிரஸ் தலைவர் ராகுல்

மனாமா பஹ்ரைன்: காங்கிரஸ் தலைவர் ராகுல் முதல் முறையாக இன்று திங்கள்கிழமை பஹ்ரைன் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அவரது ஆதரவாளர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொழில் புரியும் இந்திய வம்சாவழியினரின் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா மற்றும் மன்னர் குடும்பத்தினரையும் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் பஹ்ரைன் வாழ் இந்திய மக்களுக்கிடையே உரை நிகழ்த்துவார் என்று எதிபார்க்கப்படுகிறது. பஹ்ரைன் வாழ் இந்திய தொழில் அதிபர்களையும் சந்திக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வெளிநாடு வாழ் இந்தியர்கள்தான் இந்தியாவின் சக்தியை உலகிற்கு எடுத்துக் கூறுபவர்கள், நீங்கள்தான் உண்மையான தூதர்கள். உங்களை சந்திக்க இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்றபின் அவர் செல்லும் முதல் வெளிநாடு என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நாளை செவ்வாய்க்கிழமை இந்தியா திரும்புகிறார்.

- நமது செய்தியாளர் பெ.கார்த்திகேயன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement