Advertisement

துபாயில் அரியானா முதல்வருக்கு வரவேற்பு

துபாய்: துபாய் வந்த அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கத்தாருக்கு இந்திய தூதரகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் இந்திய வர்த்தகர்களை சந்தித்து தங்களது மாநிலத்தில் உள்கட்டமைப்பு துறைகளில் முதலீடுகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் பல்வேறு இந்திய தொழிலதிபர்களையும் தனித்தனியே சந்தித்து பேசினார். அப்போது இந்திய தூதர் நவ்தீப்சிங் சூரி, இந்திய துணைத் தூதர் விபுல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement