Advertisement

கோதன்பர்க் தமிழ்ச் சங்கத் தொடக்க விழா!

மேற்கு ஸ்வீடன் வாழ் தமிழ் மக்களின் நலன் கருதி, நம் அடுத்த தலைமுறையினர் தமிழ் மொழியை கற்கவும், பேசி பழகவும், மற்றும் தமிழ் மொழியின் புகழை ஸ்வீடன் நாட்டில் பரப்பவும், ஸ்வீடன் சிறப்பு விருந்தினர்கள் தலைமையில், தமிழ் மக்களால் கோதன்பர்க் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது.விழாவின் முக்கிய விருந்தினர்களாக கோதன்பர்க் நகர துணை மேயர் மரியா ஓய்வொடோவா, கோதன்பர்க் நகர சர்வதேச கலாச்சார இயக்குனர் குணிலா போக்மார்க் பங்குபெற்றனர். கோதன்பர்க் தமிழ்ச் சங்கத் தலைவர் சுந்தர் சங்கரலிங்கம் வரவேற்க, சிறப்பு விருந்தினர்களை சங்கத் துணை தலைவர் ஆனந்த் அந்தோணி, பொருளாளர் அருணா குமரேசன் கௌரவித்தனர்.
விழாவில் நடனங்கள், சிறுவர் சிறுமியர் குறள் மற்றும் கவிதை ஒப்புவித்தல், வினாடி வினா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சங்கத்தின் சார்பாக அடுத்து பொங்கல் விழா நடைபெறும் என கூறிய, பொதுச்செயலாளர் பிரவீன் கார்த்திக் நன்றி கூறினார்.
கோதன்பர்க் தமிழ்ச் சங்கத்தை பற்றி அறிய, பார்க்கவும் இணையதள முகவரி

www.tamilsangam.se
மேலும் விவரங்களுக்கு அணுகவும் யாசர் அரபாத், செய்தித்தொடர்பாளர், கோதன்பர்க் தமிழ்ச் சங்கம் (கைபேசி எண்: +46 721 511 771, மின்னஞ்சல் முகவரி: gothenbergtamilsangam@gmail.com)
- தினமலர் வாசகர் யாசர் அராபத்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement