Advertisement

துபாயில் முன்னாள் மத்திய அமைச்சருக்கு வரவேற்பு

துபாய்: துபாயில் முன்னாள் மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹுசைனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பில் பங்கேற்ற பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் கன்னியாகுமரி கடல் பகுதியில் மாயமான மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த ஷாநவாஸ் பிரதமரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

துபாய் வந்த அவர் துபாயில் இந்திய வர்த்தக குழுவின் சார்பில் நடந்த அமீரகத்தின் 46-வது தேசிய தின விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் இந்தியா - அமீரகம் இடையே சிறப்பான நல்லுறவு இருந்து வருவதை குறிப்பிட்டார்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement