Advertisement

நியூஇங்கிலாந்து தமிழ்ச் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா

நியூ இங்கிலாந்து தமிழ் சங்கத்தின் 2017 குழந்தைகள் விழா, பாவேந்தர் பாரதிதாசன் புகழை பறைசாற்றும் விதமாக 'சங்கே முழங்கு' என்கின்ற தலைப்பில் ஃபிரீமிங்ஹாமில் உள்ள கீஃப் டெக் ஆடிட்டோரியத்தில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் வருடா வருடம் இந்த சிறப்பு நிகழ்வை, மறைந்த தமிழ் அறிஞர்களுக்கு அர்ப்பணிப்பதின் மூலம் பழந்தமிழரின் பெருமைகளை, கடல் கடந்து உலகமெல்லாம் பரவச்செய்கிறது.
நியூ இங்கிலாந்து தமிழ் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டத்தில், குழு உறுப்பினர், சுரேஷ் கிருஷ்ணன், குழந்தைகளுக்கு ஓவிய போட்டி நடத்தலாம் என்கின்ற ஆலோசனை வழங்கி, அதை முன்னின்று நடத்தினார். கணிதம், அறிவியல் திறன் போட்டிகள் மாசசூசெட்ஸ், ரோட் தீவு மாகாணங்களில், பல்வேறு மையங்களில் நெட்ஸ் நிர்வாக குழுவினரால் நடத்தப்பட்டன.
'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு'


விழா நிகழ்வுகள், பார்வையாளர்கள் பாடிய தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, நியூ இங்கிலாந்து தமிழ் சங்கத் தலைவர் மனோகரன் கணபதி வரவேற்புரை நிகழ்த்தினார். 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' முதல் நிகழ்ச்சியாகும். நிலாவி வெங்கட் தனது இனிமையான குரலில் பாவேந்தரின் 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற வரிகளின் பெருமைகளை பாட்டுடன் மிகச்சிறப்பாக உரையாற்றினார்.
இதை தொடர்ந்து நடந்த மழழைகளின் மாறுவேட நிகழ்ச்சி, அவர்களின் அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்தது. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் திறமை ஆற்றல் ஒளிந்திருக்கும், அவற்றை வெளிக்கொணரும் விதமாக நடந்த நிகழ்வு தனித்திறன் வெளிப்பாடு. இதில் குழந்தைகள் புல்லாங்குழல் வாசித்தனர், கரகம் ஆடினர், மற்றும் பல ஆடல் பாடல் நிகழ்வுகள் நடத்தினர்.
பாவேந்தர் பாரதிதாசனுக்கு அர்பணிப்பாக 'துன்பம் நேர்கையில்' என்கின்ற பாடலுக்கு வர்ஷினி ஆறுமுகம் ஆடிய பரதநாட்டியம் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாய் அமைந்தது. முத்தமிழும் எமக்கு முக்கியம் என்பதை குழைந்தகள் சொல்வது போன்று இருந்தது அடுத்து நடந்த இயல்/இசை/நாடகம் நிகழ்ச்சி. இதில் திருவள்ளுவராக, பாரதியாக, பாரதிதாசனாக, கண்ணதாசனாக மற்றும் பல கவிஞர்கள்களாக குழந்தைகள் வேடமேற்று நிகழ்த்திய நிகழ்வுகள், கண்கொள்ளா கட்சியாய் அமைந்தது.
தமிழ் இலக்கியத்துக்கும் சரிபங்கு வேண்டும் என்று கூறி பிரபு ராம் மற்றும் கார்த்தி அருணாச்சலம், திருக்குறள் போட்டி மற்றும் சொல்லுங்கள் வெல்லுங்கள் போன்ற நிகழ்வை சிறப்பாக நடத்தினர் . இதை தொடர்ந்து இளம் திறமையாளர்கள் பங்கெடுத்த தமிழ் கீர்த்தனை பாடல்கள் உள்ளடக்கிய பரத நாட்டிய போட்டி சிறப்பாக நடைபெற்றது. ஹார்வர்ட் தமிழ் இருக்கையின் பிதாமகன் சம்பந்தம், போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு பரிசளித்தது, அவர்களை மேலும் பெருமைப்படுத்தியதுபோல் அமைந்தது.
புதிய நிர்வாகக்குழு

நியூ இங்கிலாந்து தமிழ் சங்கத்தின் புதிய நிர்வாக குழுவான மனோகரன் கணபதி (தலைவர்), சாந்தி சுந்தரமூர்த்தி (செயலாளர்), ராம் சுந்தரம் (பொருளாளர்), சுமதி நாரயணன் (இணை செயலாளர்), பிரபு ராம், கார்த்தி அருணாசலம், கிருஷ் வேல்முருகன், சரிதா வெங்கட், குரு கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் கிருஷ்ணன், பாலா சங்கர்ராஜ் ஆகியோரை சங்கத்தின் முன்னாள் தலைவர் பமிலா வெங்கட் அறிமுகப்படுத்தினார்.
இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய, நிகழ்ச்சி மெகா ஸ்பொன்சாரான சுமதி நாராயணன் ரியாலிட்டி மற்றும் செக்மென்ட் ஸ்பொன்சாரான சோஞ்சா சலாமி சட்ட அலுவலகம், நியூயார்க் லைப் இன்சூரன்ஸ் ஆகியோர்க்கு நெட்ஸ் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. விஜய் ஸ்ரீனிவாசன், க்ரிஷ் வேல்முருகன் புகைப்பட மற்றும் ஒளித்தொகுப்பு உதவி வழங்கினர். பாலா சுப்பிரமணியம், சரிதா வெங்கடேஷ், கார்த்தி அருணாச்சலம் நிகழ்ச்சியை சுவைபட தொகுத்து வழங்கினர். சுமதி நாராயணன், சாந்தி சுந்தரமூர்த்தி குழந்தைகளை ஒருங்கிணைந்து நிகழ்ச்சிகளை திறம்பட நடத்தினர். பிரபு ராம், பிரசாத் கிருஷ்ணமூர்த்தி, ராம் சுந்தரம் அனைவருக்கும் சுவையான உணவு வழங்குவதில் பெரும்பங்காற்றினர். பிப்ரவரி 3 ம் தேதி லிட்டில்டன் உயர்நிலை பள்ளியில் நடைபெற இருக்கும் நெட்ஸ் பொங்கல் விழாவிற்கு, நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

- தினமலர் வாசகர்கள் சரிதா வெங்கட், கார்த்திக் அருணாசலம்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement