Advertisement

ஆக்லாந்தில் ஐயப்பன் பூஜை

ஆக்லாந்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி ஐயப்பனை வழிபட்டனர். கார்த்திகை முதல்தேதி மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டிக்கொண்டு இங்குள்ள கோவில்களுக்கு சென்று வருவது வழக்கமாக கொண்டுள்ளார்கள். இந்த வருடமும் மாலை அணிந்து விரமிருந்தவர்கள் ராகவன் குருஸ்வாமி தலைமையில் அவர் இல்லத்தில் நடந்த ஐயப்ப பூஜையில் கலந்து கொண்டு பஜனைகள் பாடி இருமுடி கட்டி அங்கிருந்து கிளம்பி அனைத்து கோயிலுக்கும் சென்று இறுதியாக பபாக்குராவில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று இருமுடியை இறக்கினர்.

பின் சந்துரு குருக்கள, ஐயப்பனுக்கு பால், பஞ்சாமிர்தம் மற்றும் நெய்யாபிஷேகம் செய்வித்தார். அச்சமயம் பக்தர்கள் ஐயப்பன் பாடல்களைப் பாடினர். பின் ஐயப்பனுக்கு மிக சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனையும் தொடர்ந்து ஆரத்தி காட்டிய போது சரணம் ஐயபபா என்ற கோஷம் செய்து பக்தி வெள்ளத்தில் மூழ்கினர். பக்தர்கள் அனைவரும் ஐயப்பனின் அருள் பெற்றனர். நிறைவாக ஹரிவாரசனம் பாடப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் மகாப்ரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement