Advertisement

சுவிட்சர்லாந்து ஞானலிங்கேஸ்வரர் கோயிலில் தீபாவளி

அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் கேதாரகௌரி மற்றும் தீபத்திருநாள் தீபவளி வழிபாடுகள் மிகு சிறப்புடன் நடைபெற்றது. தமிழர்கள் தம் முன்னோரை வழிபட்டு நீத்தார் கடன் அளிக்கும் சிறப்புக் காலம் இதுவென்றும், சிவபெருமானைப் பிரிந்து 9 இரவுகள் சக்தி உலகத்தைப் படைத்தளித்து, பின் 21 நாட்கள் கௌரிநோன்பு நோற்று ஞானலிங்கேச்சுரரின் ஒருபாகமான விழாக்காலம் நிறையும் வேளை தீபாவளி என்றும் கூறப்படுகிறது. திருமால் வழிபாடும் தமிழர் வழிபாடே. ஆகப் புராணக் கதைகளின் விளக்கத்தினைத்தாண்டி தீயன அழிந்து, நல்லன சிறக்கும் விழாவாகவும், இருள் ஒழிந்து ஒளி பெருகும் விழாவாகவும் தீபத்திருநாள் நோக்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் ஞானலிங்கேச்சுரத்தில் கரிமுகக்கடவுளுக்கு சிறப்பு வழிபாடுகளும், கௌரிவழிபாடும், ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரரிற்கு பல் சிறப்பு கூட்டுவழிபாடுகளும் நடைபெற்றது. திருமகள் உடனாய திருமால் திருநடைவலம்வந்து நிறைவில் அருளுணவு அளித்து விழா நிறைவடைந்தது.

- தினமலர் வாசகர் தில்லையம்பலம் கீர்த்தி

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement