Advertisement

சிங்கப்பூரில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள் விழா

சிங்கப்பூரில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவு நாள் விழா கவிஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் ஆனந்தபவன் உணவக வளாக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. மன்றத் தலைவர் பா.உதிராபதி வரவேற்புரை ஆற்றினார். விழாவில் தேசியக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா மாணிக்க வாசகம் மக்கள் கவிஞரும் மனித நேயமும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத் தலைவர் இரத்தின வேங்கடேசன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் தேசியப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவைக் கவிஞர்கள் விஜயகுமார் அருள் ஓஸ்வின், சரவணன் சண்முகம், ஷர்மிலி செல்வராஜீ மற்றும் சந்திரலேகா தனபாலன் ஆகியோர் பட்டுக் கோட்டையார் பற்றிக் கவி பாடி அசத்தினர். கவிமாலையைச் சேர்ந்த கவிஞர்கள் மதிக்குமார், பனசை நடராஜன் திருமுருகன் மற்றும் ராஜீ ரமேஷ் ஆகியோரும் கலந்து கொண்டு பட்டுக் கோட்டையாருக்குக் கவிதாஞ்சலி சமர்ப்பித்தனர். பட்டுக்கோட்டையாரின் ரசிகர்கள் பெருந் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement