Advertisement

சிங்கப்பூரில் வள்ளலார் விழா

சிங்கப்பூர்: சிதம்பரம் இராமலிங்கப் பெருமானாரின் 195 ஆம் ஆண்டு வருவிக்கவுற்ற நாள் விழா சிங்கப்பூரில் இராமலிங்கப் பெருமானார் பக்தர்களால் 24 கேலாங் கிழக்கு அவென்யு 2, சிவன் கோயில் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இந்திராணி தில்லை ராஜா சன்மார்க்க ஜோதியை ஏற்றி விழாவை துவக்கி வைக்க, திருவண்ணாமலை சாது ஜானகிராமனின் தலைமையில் திரு அருட்பா அகவல் பாராயணம் மற்றும் சிவன் கோயில் தேவார குழுவினரின் திருமுறை பாடல்கள் பாடப்பட்டன.

6 வயது மாணவன் லக்க்ஷன் யுவராஜ், வள்ளலார் வேடம் அணிந்து திருஅருட்பா பாடல்கள் பாடியும் ஜீவகாருண்யம் பற்றிய செய்தியையும் விளக்கினார். திருவண்ணாமலை சாது சரவணன் குழுவினரின் ஜோதி வழிபாடு மற்றும் திருவண்ணாமலை சாது ஜானகிராமனின் வள்ளலார் காட்டிய வழி சத் சங்கம் நடைபெற்றது. லக்க்ஷன் யுவராஜுக்கு, சுதா கணேசன் நினைவு பரிசு வழங்கினார். திருஅருட்பா பாடல்கள் பாமாலையை விஸ்வேஸ்வரி பாடினார். தில்லை ராஜா அனைவருக்கும் பொன்னாடை போர்த்தினார்.


- தினமலர் வாசகர் எஸ்.குமார்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement