Advertisement

பிரான்ஸ் மீனாட்சி கோயிலில் நவராத்திரி விழா

பிரான்சில் அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் நவராத்திரி மற்றும் வெற்றி திருநாள் என்னும் வாழைவெட்டு சிறப்பாக நடந்தது. முப்பெரும் தேவியர்களுக்கு தினமும் பக்திப்பாடல்கள் ஆராதனை செய்து வழிபாடுநடைபெற்றது.ஒன்பதுநாளும்அம்மனை கும்பத்தில்ஆவாகனம் செய்து நவதானிய முளைப்பாரியிட்டு கொலு வைத்து வீட்டுறுக் செய்து, சரஸ்வதி பூஜை அன்று கல்வி தரும் செல்வியை வணங்கி மறுநாள் விஜய தசமி என்னும் வெற்றி திருநாள் அன்று முப்பெரும் தேவியர்களின் சக்தியை ஒன்றாக இணைத்து வீர வேலக ஏந்தி மகிஷா சூரனை போரில் வதம் செய்ய சர்வ அலங்காரத்துடனும் கோபமுகத்துடன் சென்று வாழை வெட்டு என்னும் விழா நடைபெற்றது.

போர் முடிந்து வெற்றி வாகை சூடி சாந்த சொரூபியாக கோவிலுக்கு திரும்பி வந்த அவளை பக்தர்கள் வணங்கி வழிபட்டு குங்குமம் மற்றும் விபூதி பிரசாதம் பெற்று மனநிறைவுடன் சென்றார்கள். இவ்விழாவின்முக்கியத்துவம் மற்றும்எழுதாப்பியாசம் போன்றவைகள் பிள்ளைகளுக்கு செய்து வைக்கப்பட்டது.

- நமது செய்தியாளர் முத்துக்குமரன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement