Advertisement

தமிழ் சிறுவனுக்கு ஆஸ்திரேலியாவில் சர்வதேச விருது

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அனிருத் கதிர்வேல் என்ற இந்திய வம்சாவளி தமிழ் சிறுவனுக்கு நரம்பியல் தொடர்பான வீடியோவுக்காக சர்வதேச விருது கிடைத்துள்ளது.
மூளை மற்றும் நரம்பு தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் கொண்ட நரம்பியல் சமுதாயம் ஒரு அமெரிக்க நிறுவனம் இதற்கான ஒரு போட்டியை நடத்தியது. நரம்பியல் தொடர்பாக எளிமையாக, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், மூளையின் வியத்தகு செயல்பாடுகளை விளக்கும் வீடியோவை உருவாக்க வேண்டும் என்பதே போட்டி.
மெல்போர்ன பல்கலைக்கழக பேராசிரியர் திருச்சூர் வித்யாசாகர் உதவியுடன் அனிருத் தயாரித்த வீடியோ சிறந்தாக தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச விருது அளிக்கப்பட்டது. 2015 ம் ஆண்டு நடைபெற்ற மகா ஆஸ்திரேலிய ஆங்கில அறிவுப் போட்டியில் முதல் வெற்றியாளராக வந்தவர் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் சர்வதேச விருது பெறுவதற்கான வீடியோ இணைப்பு
https://m.youtube.com/watch?v=-w3iV6YfbKM
- தினமலர் வாசகர் பிரீத் கதிர்வேல்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement