Advertisement

சிங்கப்பூரில் கவிமாலை

சிங்கப்பூர் கவிமாலை ஜலான்புசார் இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து நடத்தும் கவிமாலை 211 ஆவது நிகழ்வாக கவிஞர் இறைமதியழகன் தலைமையில் நடைபெற்றது.முதல் நிகழ்வாக மனதில் நின்ற கவிதைகள், படித்தவற்றுள்ளும் படைத்தவற்றுள்ளும் பிடித்தவைகளைக் கவிஞர்கள் படைத்தனர். “ வெளிச்சம் “ என்ற தலைப்பில் வெற்றி பெற்ற கவிதைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் வாசிக்கும் கவிதை அங்கம் கவிஞர் இன்பாவால் நடத்தப்பட்டது.

கவிதைகளைத் திரையிட்டு விமர்சனப் பார்வையில் விவாதித்தல் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. கவிமாலைத் தொகுப்பு நூல் பற்றிய ஒரு பார்வை அங்கமும் இடம் பெற்றது. மாதம் ஒரு பிற மொழிக் கவிஞரை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் தொடங்கப்பட்டு இன்றைய நிகழ்வில் லெபனியக் கவிஞர் கலீல் கிப்ரான் பற்றி கவிஞர் இறைமதியழகன் உரையாற்றினார். கவிஞர்களிடை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கவிமாலைப் புத்தகப் பரிமாற்ற அங்கமும் தொடங்கப்பட்டது.

“ பெருங்கதை “ என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிக் கவிதையில் கவிஞர் தங்கமணி முதற் பரிசு பெற்றார். மரபுக் கவிதைக்கான பரிசினை கவிஞர் ந.வீ.விசயபாரதி பெற்றார். இரண்டாவது பரிசுகளைக் கவிஞர்கள் கி.கோவிந்தராசு, கருணாகரசு, சக்திக் கண்ணன் பெற்றனர். மூன்றாவது பரிசு தியாகராசன், பாலமுருகன், லலிதா சுந்தருக்கு வழங்கப்பட்டது. மாணவர் துரை குமரன் மாணவி குழலி கவிதைகள் பாராட்டப்பட்டன. கவிஞர் பாலமுருகன் நிகழ்வினை நெறிப்படுத்தினார்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement