Advertisement

ஒமஹாவில் கணேஷ் சதுர்த்தி

ஒமஹா, நெப்ராஸ்காவில் கணேஷ் சதுர்த்தி வருடம் மிகவும் விமர்சியையாக கொண்டாட படுகிறது. இந்த வருடமும் நான்கு நாள் உத்சவமாக கொண்டாடப் பட்டது. முதல் நாள் மூலவருக்கு அபிஷேகத்தில் தொடங்கி, வேத பாராயணம், வித்யா கணபதி பூஜை, கணபதி ஹோமம், ரத யாத்திரை , மராத்தி மண்டல் குழுவினர் லெஜிம் நடனம் மற்றும் கடைசியாக கோவிலின் ஆஸ்தான வித்துவான் டில்லி சுந்தர்ராஜனின் பாட்டு கச்சேரியுடன் இனிதே முடிவைடைந்தது.

கோவிலின் தொண்டர்கள் விநாயகரை பூ அலங்காரத்தில் அலங்கரித்தார்கள். பிள்ளையாருக்கு 108 விதமாக பிரசாதங்கள் நெய்வேதியும் செய்தனர். பக்தர்கள் எல்லோரும் தரிசனம் செய்து பிள்ளையாரின் அருளை பெற்றனர்.

- தினமலர் வாசகி ரமா வெங்கடேஷ்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement