Advertisement

பஹ்ரைன் தமிழர் பேரவை சார்பில் இரத்ததான முகாம்

மனாமா பஹ்ரைன்: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் (பஹ்ரைன் தமிழர் பேரவை) மற்றும் சல்மானியா மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் சல்மானிய மருத்துவமனை இரத்த வங்கியில் நடைபெற்றது. தமிழர்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்ட இந்த இரத்த தான முகாமிற்கு சங்க சமூகநலத்துறை செயலாளர் தூத்துக்குடி செந்தில், மருத்துவமனை இரத்த வங்கியின் தலைமை அதிகாரி நாடியா அப்துல் லதீப் இஸ்மாயில் முன்னிலை வகித்தனர்.

சங்க உறுபினர்கள் நலத்துறை சார்பில் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. சங்க சமூகநலத்துறை துணை செயலாளர் காரைக்குடி தாமரைக்கண்ணன் கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சங்க பொருளாளர் மதிவாணன், ஊடகத்துறை செயலாளர் கார்த்திக், விளையாட்டுத்துறை செயலாளர் முகமது பைசல், வளர்ச்சித்துறை செயலாளர் நித்தியானந்தன், இலக்கியத்துறை செயலாளர் சுரேஷ், வேலை வாய்ப்புத்துறை செயலாளர் முகமது அபுசாலி, உறுபினர்கள் நலத்துறை செயலாளர் இராஜ்குமார் உடனிருந்தனர். பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தில் இணைய 35362495.


- தினமலர் வாசகர் கார்த்திக்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement