Advertisement

ஹாங்காங்கில் சமஸ்கிருத தினம்

ஹாங்காங்: சமஸ்கிருத வாரத்தை முன்னிட்டு, ஹாங்காங்கில் இந்து ஸ்வயம் சேவாக் சங்கத்தின் சார்பில் சமஸ்கிருத தினம் கொண்டாடப்பட்டது.

ஹாங்காங் விஷ்வ இந்து பரிஷத் துணைத் தலைவர் அமி கணாத்ரா அனைவரையும் சளஸ்கிருதத்தில் வரவேற்றார். விழாவின் விருந்தினரை, ஜெயா பீசாபதி அறிமுகம் செய்து வைத்தார்.


இந்திய புவியியல் ஆய்வுத்துறை முன்னாள் இயக்குநரும் ஈஸ்வரா என்ற அமைப்பின் நிறுவன செயலாளருமான டி.எஸ்.ராமகிருஷ்ணா, ' ஆன்மாவின் பாதுகாவலன் சமஸ்கிருதம் ' என்ற தலைப்பில் உரையாற்றினார். சமஸ்கிருத வேதங்களின் மதிப்புகளை அவர் விளக்கினார்.


நிகழ்வில் பங்கேற்றவர்கள் இந்த சிறப்புரை மூலம் சமஸ்கிருதத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து எதிர்காலத்தில் சமஸ்கிருதம் கற்க ஆவலாக இருப்பதாக தெரிவித்தனர்.


விழாவில் ரக்சா பந்தனும் கொண்டாடப்பட்டது. ஒருவருக்கொருவர் ரக்சா கட்டிக் கொண்டனர். நிறைவாக சுவையான சைவ விருந்து அளிக்கப்பட்டது.


- நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement