Advertisement

சிங்கப்பூரில் கவிமாலை

சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு ஜலான்புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிமாலை 209 ஆவது நிகழ்வாக மன்ற அரங்கில் நடைபெற்றது. முதல் அங்கமாக கவிஞர்கள் தங்கள் மனதில் நின்ற கவிதைகளையும் படித்தவற்றுள் பிடித்தவைகளையும் படைத்தனர். வாசகர் வட்டத்தைச் சேர்ந்த சித்ரா ரமேஷ் முன்னிலை வகித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த அருண் சரண்யா “ கற்பனையாளராக இருத்தல் “ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் தமிழாசிரியர் ஆறுமுகம் எழுதிய நூல் வெளியீடு கண்டது. மூத்த கவிஞர் மா.அன்பழகன் நூல் அறிமுக உரையாற்றினார். கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு ரொக்கப் பரிசளிக்கப்பட்டது. கவிமாலைத் தலைவர் கவிஞர் இறை.மதியழகன் வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் கி. கோவிந்தராசு நிகழ்வினை நெறிப்படுத்தினார்.

- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement