Advertisement

பிரான்சு இந்திய தூதருக்கு பாரீஸில் பிரிவுபசாரவிழா

பிரான்சு நாட்டின் இந்திய தூதராக கடந்து ஐந்து ஆண்டுகளாக இருந்தவர் நமது மதுரையைச் சேர்ந்த டாக்டர் மோகன் குமார். இவர் தூதுவராக இருந்த போது பாரீசில் வசிக்கும் தமிழர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வந்தார். தனது பதவிக்காலம் முடிந்து தமிழகம் திரும்பும் இவருக்கு பிரான்சு கோபியோ சங்கம் மூலம் நன்றி கூறும் பிரிவுபசார விழா நடைபெற்றது. விழாவில் பாரீஸ் பாண்டிச்சேரி அசோசியேஷன் தலைவர் பாரீஸ் பார்த்தசாரதி, முன்னாள் பிரஞ்சு எம்.பி.ஆபிசர் ஷெவலியே டுபாய் குழந்தை, இலங்கை வேந்தன், பாண்டுரங்கன், தூத்துக்குடி சங்கர் பங்கேற்றனர். கோபியோ தலைவர் ராஜாராம் நன்றி கூறினார்.

- தினமலர்வாசகர் பாரீஸ் பார்த்தசாரதி

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement