Advertisement

திருகோணமலை கிளை இலங்கை செஞ்சிலுவை சங்க பயிற்சி பட்டறை

இலங்கை செஞ்சிலுவை சங்கம், திருகோணமலை கிளையினால் அவர்களது தெரிவுசெய்யப்பட்ட தொண்டர்களுக்கு "DDRT - மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு" பயிற்சி பட்டறை 05 & 06 ஆகஸ்ட் 2017 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைவர் டாக்டர் ஈ. ஜீ. ஞானகுணாளன், கிளை நிறைவேற்று அதிகாரி டாக்டர். என். ரவிச்சந்திரன், மட்டக்களப்பு கிளை நிறைவேற்று அதிகாரி பிரேம்மகுமார், கொழும்பு இலங்கை செஞ்சிலுவை சங்க அதிகாரி தமித்த சானாக மற்றும் முன்னாள் மாவட்ட அனர்த்த அதிகாரி முஹைஜிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கௌரவ தலைவர் டாக்டர். குணாளன் உரையாற்றும் போது, ‘இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வளர்ச்சி அங்கத்தவர்களினதும் தொண்டர்களினதும் கைகளிலேயே தங்கியுள்ளது. தொண்டர்கள் தான் செஞ்சிலுவை இயக்கத்தின் முதுகெலும்பாவார்கள். இந்த. பயிற்சி பட்டறையின் பலனை தங்களது பிரதேசத்தில் பாதிப்புக்குட்பட்ட மக்களது நலனைக் கருத்திற் கொண்டு மனிதாபிமான, சமூகச் செயற்திட்டங்களைச் செயற்படுத்துதல் வேண்டும். மேலும் தத்தமது பிரிவுகளில் கூடுதலான அங்கத்தவர்களையும் தொண்டர்களையும் இணைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுதல் வேண்டும்’ எனக் கூறினார்.கூட்டத்தின் இறுதியில் தங்களது பயிற்சி பட்டறையை பூர்த்தி செய்த இளைஞர் தொண்டர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

- தினமலர் வாசகர் ஜி.குணாளன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement