Advertisement

துபாய் அல் கரூத் பூங்காவில் நூலகம்

துபாய் : துபாய் மாநகராட்சியின் சார்பில் அல் கரூத் பூங்காவில் நூலகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கிற்காக பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் தங்களது ஓய்வு நேரத்தின் போது அறிவினை வளர்த்துக் கொள்ள உதவியாக இந்த பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பூங்காவிற்கு வரும் பொதுமக்களை கவரும் விதத்தில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. வாசிப்பை நேசிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அரபி மற்றும் ஆங்கில நூல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்பாக வழங்க விருப்பம் உள்ளவர்கள் நூல்களை வழங்கலாம்.

இந்த நூலகம் திட்டம் பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து படிப்படியாக பல்வேறு பூங்காகளுக்கும் விரிவு படுத்தப்படும்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement