Advertisement

குழந்தை வேலன் காவடி

நெப்ராஸ்கா, ஒமாகா அருள்மிகு பிரசன்ன கணபதி ஆலயத்தில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத முருகபெருமானுக்கு குழந்தைகள் மட்டும் காவடி எடுக்கும் இனிய நிகழ்வு முதல் முறையாக‌ இனிதே நடைபெற்றது. 60க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் காவடி விரதம் இருந்து பால், பன்னீர் காவடி எடுத்து கோவிலை அரோகரா கோஷத்தோடு வலம் வந்தனர். குழந்தைகளும் பெற்றோர்களும் பக்தி பரவசத்துடன் பலவண்ண காவடியுடன் கோவிலை வலம்வந்தது தமிழ் கடவுள் முருகனின் அபிசேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை கண்டு மனம் குளிர்ந்தனர்.

கீர்த்தி ரஞ்சித்தின் காவடி சிந்து நடனம் முருகன் சன்னிதானத்தில் நடைபெற்றது. முதல்முறையாக நடைபெற்ற இந்த இனிய பக்தி நிகழ்வை சஞ்சீவ், மாலதி பாலு, ராமசுப்பிரமணியன் மற்றும் பல தமிழ் குடும்பத்தார் ஓமாகா இந்து கோவில் நிர்வாகத்தினர் ஒத்துழைப்புடன் முன்னேடுத்து நடத்தினர். பக்தர்கள் அனைவருக்கும் சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியாக 'சங்கீத சமர்பணம்' கர்நாடக இசை நிகழ்ச்சி நந்தினி ஸ்ரீதர் வாய்பாட்டு, ரிஷாபா வயலின், பிரனாவ்கிருஷ்ணா மிருதங்கம் பங்கேற்க சிறப்பாக அமைந்தது.

- தினமலர் வாசகர் அனுநாதன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement