Advertisement

ஜெர்மனியில் நாகபூஷணி அம்மன் ஆலய ரதோற்சவம்

பிராங்க்பர்ட்: ஜெர்மனி, பிராங்க்பர்ட் நகரில் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய ரதோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. பிராங்க்பர்ட் நகரில் அழகொழுக வீற்றிருந்து நாடிவரும் பக்தர்களுக்கு இன்னருள் பாலித்து அருளாட்சி புரியும் அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாம் ஸ்ரீநாகபூஷணி அம்பாளின் உயர் திருவிழாவின் ரதோற்சபம் 08.07.2017 சனிக்கிழமை காலை நடைபெற்றது. ஐரோப்பாவின் நாலா பக்கத்திலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பகத்ர்களின் அரோகரா கோஷம், பஜனை, மங்கலவாத்தியங்கள் முழங்க, காவடிகள், அங்கப்பிரதிஷ்டைகள், ஆலவட்டங்கள் புடைசூழ அழகிய தேரினில் ஸ்ரீநாகபூஷணி அம்பாள் பவனி வந்து அடியார்களுக்கு அருள் பாலித்தார்.

- தினமலர் வாசகி உமா யசோதன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement