Advertisement

துபாய் மாநகராட்சியில் 2 டன் குப்பை மறுசுழற்சிக்கு சேகரிப்பு

துபாய் : துபாய் மாநகராட்சியின் சார்பில் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை பொதுமக்கள் ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் 15 நாட்களில் 2 டன் குப்பைகளை ஒப்படைத்தனர்.

இந்த குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குப்பைகளை ஒப்படைத்த பொதுமக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement