Advertisement

ஹாங்காங்வாழ் தமிழரின் நிறுவனத்திற்கு சிறந்த விருது

ஹாங்காங்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் பிறந்த சாம் அருணாசலம் என்ற ஹாங்காங் வாழ் தமிழரின் பஸ்ஸர் என்ற நிறுவனம், ஹாங்காங்கின் தலைசிறந்த 4 நிறுவனங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு, விருது பெற்றுள்ளது
கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன், டேப்லட்டுகள் மற்றும் இணையதள வசதி உளள கருவிகளில் ஏற்படும் கோளாறுகளை கண்டுபிடித்து சரி செய்யும் செயலியை ( ஆப்ஸ்) பஸ்ஸர் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஹாங்காங்கில் உருவாக்கப்பட்ட 4 சிறந்த செயலிகளில் ஒன்றாக இதை சவுத் சீனா மார்னிங் போஸ்ட் ஆங்கில நாளிதழ் தேர்வு செய்து, 2017 ம்ஆண்டிற்கான தொழிலக குறியீட்டு விருதை வழங்கியுள்ளது.

கோவை சி.ஐ.டி.,யில் பட்டம் பெற்ற சாம் அருணாசலம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பல சர்வதேச நிறுவனங்களில் ஐ.டி., துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கம்ப்யூட்டர் போன்றவற்றைப் பயன்படுத்துவோருக்கு பயன் அளிக்கும் செயலிகளின் தேவையை உணர்ந்த அவர், இந்த பஸ்ஸர் செயலியை உருவாக்கியுள்ளார். ஐஓஎஸ்., மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் கிடைக்கும் இந்த செயலி, பஸ்ஸரின் இணையதளம் (www.buzzer.hk), வாட்ஸ்அப் மூலம் தங்கள் பிரச்னையை தெரிவித்து 2 மணி நேரத்திற்குள் தீர்வைக் காண முடியும்.

- நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement