Advertisement

சிங்கப்பூரில் தமிழ் நூல்கள் வெளியீட்டு விழா

எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி எழுதிய “ ஐம்பெருங் காப்பியங்களில் தமிழர் வாழ்வியல் “ மற்றும் "நேற்றிருந்தோம்.....நினைவலைகள் “ நூல்கள் வெளியீட்டு விழா சிங்கப்பூர் டேங்க் ரோடு தண்டாயுதபாணி ஆலயப் பன்னோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினர் இரா.தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி நூல்களையும் வெளியிட்டார். முதற்படியை தொழிலதிபர் ஜோதி மாணிக்க வாசகம் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்தோர் பெற்றனர்.

"ஐம்பெரும் காப்பியங்களில் தமிழர் வாழ்வியல் “ நூலினை சித்துராஜ் பொன்ராஜ் ஆய்வு செய்தார். “ நேற்றிருந்தோம்.... நினைவலைகள் “ நூலை சூரியரத்னா திறனாய்வு செய்தார். தமிழகப் பத்திரிகையாளர் மாலன், பொன்.வாசுதேவன், ரமேஷ் வைத்யா வாழ்த்துரை வழங்கினர். கவிஞர் அ.கி.வரதராஜன் கவிஞருக்குப் பாமாலை சூட்டி வாழ்த்தினார். முன்னதாக சித்ரா ரமேஷ் வரவேற்றார். நூலாசிரியர் ஸ்ரீலட்சுமி ஏற்புரை ஆற்றினார்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement