Advertisement

மலேசியாவில் மகரிஷி பரஞ்சோதியாருக்கு விருது

மலேசியா சிலாங்கூர் ஷா ஆலம் தாமான் சிறிமுடாவில் அமைந்துள்ள மலேசியத் தமிழ் மணி மன்றச் சிறப்புக் கூட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மன்றத் தலைவர் தலைமை வகித்தார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் போ.சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவ்விழாவில் தென்கயிலைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி உலகளாவில் ஆன்மிகத் தமிழ் இலக்கியப் பணி ஆற்றி வருபவரும் தொன்மை வாய்ந்த ஆன்மிகத் தமிழ் அறிவியல் தமிழ் மறை திருமூலரின் திருமந்திரத்தை உலகப் பொது மறையாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருபவருமான உடுமலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவநர் மகரிஷி பரஞ்சோதியாருக்கு “ ஆளுமைச் சிகரம் “ எனும் உயரிய விருது வழங்கப்பட்டது. ‘ விருதால் சிலர் பெருமை அடைகிறார்கள் – சிலரால் விருது பெருமை பெறுகிறது. மகரிஷிக்கு அளிக்கப்படும் விருதால் மன்றம் பெருமை கொள்ளுகிறது – விருது சிறப்புறுகிறது “ எனத் தலைவர் குறிப்பிட்டார். திரளாள தமிழ் இலக்கிய – ஆன்மிக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
- தினமலர் வாசகர் சொற்கோ

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement