Advertisement

அமெரிக்காவில் கூட்டு சக்தி வழிபாடு

டிங்ஸ்போரோ: அமெரிக்காவில் சக்தி பூஜைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அமெரிக்கவாழ் இந்திய குடும்பங்கள் கூட்டாக இந்த பூஜையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக மாதம் ஒரு முறை ஒரு இடத்தில் அனைவரும் கூடி இந்த பூஜையை நடத்துகின்றனர்.
டிங்ஸ்போரோவில் ஒரு வீட்டில் இத்தகைய சக்தி வழிபாடு பூஜை நடைபெற்றது. பூஜை நடைபெறும் இடத்தில் கோலம் இட்டு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் அம்மனின் புகைப்படங்கள் வைத்து அதற்கு மாலையிட்டு, அருகில் விளக்கேற்றி வைத்தனர். சக்தி பூஜையில் கலந்து கொண்ட அனைத்து குடும்பத்தினரும் உலக அமைதி பொருட்டும், மழை வேண்டியும், ஆரோக்கிய வாழ்வு பெறவும் சக்தியை நினைத்து வழிபட்டனர். சக்தியின் போற்றிப் பாடல்களை மனம் உருகி பாடினர்.


மாரி காளி என்று சக்தி தெய்வத்தையே மக்கள் மிகுதியாகக் கொண்டாடி வருவதற்கு டிங்ஸ்போரோவில் நடைபெற்ற சக்தி வழிபாடடு ஒன்றே சான்றாக உள்ளது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் வார்;த்து கோயில் கொடை என்ற பெயரில் வருடத்திற்கு ஒரு முறை மிக சிறப்பாக அம்மன் வழிபாட்டினை நாம் நடத்துவதுண்டு. கடல் கடந்து வந்து அமெரிக்காவில் குடியேறிய அமெரிக்க வாழ் இந்திய குடிமக்கள், மாதந்தோறும் இது போன்று ஒன்று கூடி சக்தி வழிபாடு நடத்துவது பொதுவாக வியப்பினைத் தரும் செய்தியாகும்.


- தினமலர் வாசகர் ச.பொன்ராஜ்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement