Advertisement

துபாய் மாநகராட்சியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒப்பந்தம்

துபாய் : துபாய் மாநகராட்சியுடன் ஈசா சாலே அல் குர்க் சாரிட்டி அறக்கட்டளை ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமீரக உணவு வங்கி சேவையில் ஒத்துழைப்பை அளிக்க முடியும். இந்த ஒப்பந்தத்தில் துபாய் மாநகராட்சியின் டைரக்டர் ஜெனரல் ஹுசைன் நாசர் லூத்தா மற்றும் ஈசா சாலே அல் குர்க் சாரிட்ட அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ராஜா ஈசா சாலே அல் குர்க் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அமீரக உணவு வங்கி அமீரகத்தில் மீதப்படும் உணவுகளை சேகரித்து வசதியற்றவர்களுக்கு சுகாதாரமான முறையில் வழங்கி வருகிறது. இந்த பணிக்கு இந்த அறக்கட்டளை சிறப்பான ஒத்துழைப்பை அளிக்கும். மேலும் மீதப்படும் உணவுகள் அமீரகத்தில் மட்டுமல்லாது வசதியற்ற நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

இதன் மூலம் குறைந்த வருமானமுடையவர்கள் பயனடைவார்கள். மேலும் உணவுப் பொருட்கள் வீணாவது தடுக்கப்படும்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement