Advertisement

அமெரிக்காவில் கர்நாடக இசை நிகழ்ச்சி

நாசுவா: அமெரிக்காவில் நியுஹாம்ஸ்பியர் மாநிலத்தில் நாசுவா என்ற பகுதியில் பிராட் ஆரம்ப பாடசாலையில் கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கீதத்தில் பயிற்சி பெற்ற 15 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.


இவர்கள் தங்களது பள்ளிப் படிப்பு முடிந்த பின்பு பகுதி நேரமாக சங்கீதப் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் பெற்றோர்களின் பங்கு பாரட்டுக்குரியது. இறுதியாக சங்கீதம் கற்றுக் கொடுக்கும் அமெரிக்க வாழ் இந்திய ஆசிரியை சந்தியாவும் , அவரிடத்தில் சங்கீத பயிற்சி பெற்ற அமெரிக்க பிரதிநிதியான கார்கேயும் இணைந்து பாடிய ‘பஜ கோவிந்தம்’ மக்களை மிகவும் கவர்ந்தது. சங்கீத வித்துவான்கள் தியாகராஜ சுவாமிகள், முத்துச்சாமி தீட்சிதர் பற்றி; சந்தியா எடுத்துக் கூறினார்.


- தினமலர் வாசகர் ச.பொன்ராஜ்


Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement