Advertisement

இந்திய திட்டங்களுக்கு ஹாங்காங் வாழ் இந்தியர்கள் நிதி உதவி

ஹாங்காங்: ஹாங்காங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், இந்திய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு, ஹாங்காங் வாழ் இந்திய தொழில் அதிபர்கள் தாராளமாக நிதி உதவி அளித்தனர்.

ஹாங்காங்கில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் இந்திய மேம்பாட்டு அறக்கட்டளை கூட்டம் நடைபெற்றது. இந்திய தூதரகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்திய தூதர் புனித் அகர்வால் வரவேற்க, அறக்கட்டளை நிர்வாக குழுத் தலைவரும், இந்திய வெளியுறவுத்துறை செயலாளருமான தியானேஸ்வர் முலே, இந்திய திட்டங்களுக்கு உதவுவதில் ஹாங்காங்வாழ் இந்தியர்கள் காட்டி வரும் ஆர்வத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். உலக அளவில் இத்தகைய கூட்டம் முதன்முதலாக ஹாங்காங் இந்திய தூதரகத்தால்தான் நடத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்தியாவில் நிறைவேற்றப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து விளக்கிய இந்திய வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் வாணி ராவ், தூய்மை இந்தியா மற்றும் கங்கையைத் தூய்மைப்படுத்தலுக்கான குறுகிய காலத் திட்டங்கள், அவை தொடக்கம், நிறைவேற்றல் மற்றும் நிறைவு பெறுதல் தொடர்பான நடைமுறைகளை விரிவாக விளக்கினார்.


இந்த குறுகிய காலத் திட்டங்களுக்கு ஹாங்காங் வாழ் இந்தியர்கள் உதவ முன் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த கூட்டத்தில் பங்கேற்ற இந்திய தொழில் அதிபர்கள் தங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளும் வகையில் வினாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பிரவேசி திவாஸ் விருது பெற்றவர்கள் உட்பட பலரும் இந்திய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தாரளமாக நிதி உதவி அளித்தனர். மேலும் இந்தியவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களும் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்தனர்.


- நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement