Advertisement

சிட்னி தமிழ் அறிவகத்தின் 'வசந்த மாலை'

சிட்னி: ஆஸ்திரேலியா, சிட்னியில் இயங்கி வரும் சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த நிகழ்வான 'வசந்த மாலை' நடைபெற்றது.

சங்கீத ஆசிரியர் மாலதி சிவசீலனின் 'ஸ்ருதிலயா' மாணவர்கள் வழங்கிய 'இசை வேள்வி' நிகழ்வோடு ஆரம்பித்த நிகழ்வில், சிட்னி தமிழ் அறிவகத் தலைவர் மகாலிங்கம் மோகன்குமார் உரை, பாராளுமன்ற உறுப்பினர்களின் உரை இடம் பெற்றது. தொடர்ந்து நடன ஆசிரியை மிர்னாளினி ஜெயமோகனின் 'அபிநயாலயா' நடனப் பள்ளி மாணவர்களின் 'ஆடல் இன்பம்' நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வுகள் யாவும் சிட்னி வாழ் சிறார்களினாலும், இளையோர்களினாலும் நடத்தப்பட்ட நிகழ்வுகள். அதற்கு முத்தாய்ப்பாய் உயர்தர பரீட்சைக்கு தமிழை ஒரு பாடமாக எடுக்கவிருக்கும் ஒரு மாணவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.


சுமார் 200 நூல்களோடு 1991 ஆம் ஆண்டு சிறிய நூலகமாக ஆரம்பமாகிய அறிவகம் இன்று 9,000-க்கும் மேற்பட்ட நூல்களை தன்னகத்தே கொண்டு, பல் சேவைகளை வழங்கும் தமிழ் அறிவகமாக வளர்ந்து நிற்கின்றது.


- தினமலர் வாசகர் ராஜரத்னம் நிருபாகரன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement