Advertisement

பஹ்ரைனில் தலைவாழையில் தமிழ்ப் புத்தாண்டு விருந்து

பஹ்ரைன்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 'பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்' சார்பில் 'சித்திரை திருவிழா' ஹூரா பகுதியில் கொண்டாடப்பட்டது. சங்கத்தின் சார்புக் குழுவான 'பஹ்ரைன் தமிழ் மங்கையர்' குழு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சங்க உறுப்பினர்கள் உட்பட சுமார் 500 பேர் பங்குபெற்ற விழாவில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுவாரஸ்யமான விவாத மேடை நிகழ்ச்சியும் நடைபெற்றது. சங்க நிர்வாகிகளான மதிவாணன், கார்த்திக், முகமது பைசல், நித்யானந்தன், மங்கையர் குழு ஒருங்கிணைப்பாளர்களான ப்ரீதா, அனீஸ் பாத்திமா, அனிதா, ஜெயந்தி, ஹாஜிரா சிறப்புரையாற்றினர்.விழா முடிவில் வாழை இலையில் நமது பாரம்பரிய முறைப்படி உணவு பரிமாறப்பட்டது.

- தினமலர் வாசகர் பெ. கார்த்திகேயன்



Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement