Advertisement

தமிழ் மொழி விழா 2017: சிங்கப்பூரில் சிறப்புப் பட்டி மன்றம்

சிங்கப்பூர்: தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக உட்லண்ட்ஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவினர் சிறப்புப் பட்டிமன்றத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி மன்ற கலையரங்கில் ஏற்பாடு செய்திருந்தனர். “ மகிழ்ச்சியாக வாழ்வதை அதிகம் பாதிப்பது நம்முடைய எதிர்பார்ப்புகளே – சமூகத்தின் எதிர்பார்ப்புகளே “ என்பது பட்டி மன்றத்தின் தலைப்பு. நம்முடைய எதிர்பார்ப்புகளே என்ற அணியில் கண்ணன் சேஷாத்திரி – மாணிக்கம் – ரவிச்சந்திரன் சோமு ஆகியோர் பங்கேற்று வாதிட்டனர். ரமா சுரேஷ் – ராஜேஷ் குமார் – கே.வி.ராஜா ஆகியோர் சமூக எதிர்பார்ப்புகளே என எதிர் வாதிட்டனர். முனைவர் மன்னார்குடி ராஜ கோபாலன் நடுவராக வீற்றிருந்து பல இலக்கியச் செறிவான கருத்துக்களைக் குறிப்பிட்டு – இருதரப்பு வாதங்களையும் திறனாய்வு செய்து தனி மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகம் பாதிப்பது சமூகத்தின் எதிர்பார்ப்புகளே எனத் தீர்ப்பளித்தார். முன்னதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சிவா வரவேற்புரை ஆற்றினார். நாடாளு மன்ற உறுப்பினர் அம்ரின் அமின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். சேகர் – செந்தில் ஆகியோர் நிகழ்வினை நெறிப்படுத்தினர்.

- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement