Advertisement

மஸ்கட்டில் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்பு கருத்தரங்கம்

மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரக வளாகத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சிறப்பு கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கருத்தரங்கத்துக்கு இந்திய தூதர் இந்திரமணி பாண்டே தலைமை வகித்தார். அவர் தனது உரையில் அம்பேத்கர் ஒரு சமூகப் போராளியாக தனது வாழ்வினை அர்ப்பணித்துக் கொண்டவர் என குறிப்பிட்டார். கல்வியாளர்கள் பலரும் அம்பேத்கரின் பெருமைகள் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக அம்பேத்கரின் படத்துக்கு இந்திய தூதர் மாலை அணிவித்து கௌரவித்தார். இந்த கருத்தரங்கில் இந்திய சமூகத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement