Advertisement

ஷார்ஜாவில் இலவச மருத்துவ முகாம்

ஷார்ஜா : ஷார்ஜா தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு வரும் அல் நஜ்மா அல் பரிதா தொழிலாளர் முகாமில், தமிழ்ப் புத்தாண்டையொட்டி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஷார்ஜா தும்பே மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் கொண்ட குழுவினர் தொழிலாளர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், பொது மருத்துவம், பல் உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக மேற்கொண்டனர். மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்கி மருத்துவமனைக்கு வருமாறு கூறினர். அங்கு அவர்களுக்கு பெரும்பாலான சிகிச்சைகள் இலவசமாகவே வழங்கப்படும் என தெரிவித்தனர்.

மருத்துவ முகாமை சிறப்புடன் நடத்திய டாக்டர்களுக்கு அல் நஜ்மா அல் பரிதா நிறுவன அதிகாரி ஜமால் ஹாஜா பூங்கொத்து வழங்கி கௌரவித்தார். அப்போது மேலாளர் அபுதாஹிர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த மருத்துவ முகாம் சிறப்புடன் நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகளை முதுவை ஹிதாயத், சதாம், கபூர், கீழை ஹமீது யாசின், திருச்சி முகம்மது இக்பால், பூதமங்கலம் முகைதீன் அப்துல் காதர், சென்னை தமீம், வழுதூர் சபீக் அகமது உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

பிளாக் துலிப் பிளவர்ஸ், பிரான் ஜூஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த முகாம் நடப்பதற்கு ஆதரவு அளித்திருந்தன.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement