Advertisement

காட்சிப்பொருளாக வகுப்பறை கட்டடங்கள்! உறைவிட பள்ளிகளில் ஏகப்பட்ட சிக்கல்

உடுமலை:உண்டு உறைவிடப்பள்ளிகளில், காட்சிப்பொருளாக உள்ள கட்டடங்களை விரைவில், மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை கல்வி மாவட்டத்தில், திருமூர்த்திநகர், அமராவதி, கொங்குரார்குட்டை, கரட்டூர் மற்றும் மடத்துக்குளத்தில், மலைவாழ் கிராம குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப்பள்ளிகள் உள்ளன.பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் இப்பள்ளிகளில், &'தாட்கோ&', திட்டத்தில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும், வகுப்பறை மற்றும் சமையலறை என பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடக்கிறது.அமராவதிநகர் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம், திருமூர்த்திநகர் பள்ளியில் மாணவர்களுக்கான உணவு அருந்தும் அறை, மற்றும் கொங்குரார் குட்டை பள்ளியில், வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளும் நடக்கிறது. கொங்குரார்
குட்டை மற்றும் கரட்டூர் உண்டு உறைவிடப்பள்ளியில், மாணவர்களுக்கான உணவு அருந்தும் அறையுடன் கூடிய புதிய சமையலறை கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தும், மாணவர்கள் பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.ஒவ்வொரு பள்ளியிலும் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இரண்டு பள்ளிகளிலும், வகுப்பறை பற்றாக்குறை மற்றும் சமையலறையும் சிதிலமடைந்தும், புகை படிந்தும், உள்ளது. புகைபடிந்த அறையில் அமர்ந்து, குழந்தைகள் உணவு உட்கொள்கின்றனர்.
ஒரு பள்ளியில், சமையலறை பொருட்களை வகுப்பறையில் வைக்க வேண்டிய நிலையும் உள்ளது. சிதிலமடைந்த சமையலறையில், பணிசெய்யும் சமையலர்களும் ஆபத்தான சூழலில் தினசரி உணவு தயாரிக்கின்றனர்.பணிகள் முடிந்து, ஓராண்டாகியும் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதால், குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.
கட்டடப்பணிகள் முடிந்த பள்ளிகளில், விரைவில் அந்த அறைகளை மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்த நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement