Advertisement

நிலவேம்பு கஷாயம் வழங்கல்

புதுச்சேரி:சேலியமேடு பள்ளி மாணவ மாணவியருக்கு, டெங்கு காய்ச்சலை தடுக்க, நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.சேலியமேடு கவிஞர் வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு சிக்குன் குனியா காய்ச்சலை தடுப்பதற்காக, மாணவ மாணவியருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை பாப்பம்மாள் தலைமை தாங்கினார். ஆசிரியர் லிங்குசாமி வரவேற்றார்.
பாகூர் கொம்யூன் ஆணையர் சவுந்திரராஜன், மாணவ மாணவியருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார். தலைமை ஆசிரியர் (2) பத்மாவதி முன்னிலை வகித்தார். சமுதாய நலப்பணித்திட்ட பொறுப்பாசிரியர் கல்யாணசுந்தரம், ஆசிரியர்கள் வேல்முருகன், சரவணன், ஆசிரியைகள் கோமதி, பாக்யலட்சுமி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement