Advertisement

கூனிச்சம்பட்டு பள்ளி சுற்றுச்சுவர் சேதம்

திருக்கனுார்:கூனிச்சம்பட்டு அண்ணா அரசு மேல்நிலை பள்ளி சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டில் உள்ள அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியை சுற்றிலும் 5 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. பள்ளியின் முன்புறம் சாலையையொட்டி அமைக்கப்பட்டுள்ள சுற்றுச் சுவர் போதிய பராமரிப்பு இல்லாததால், சேதமடைந்து சாலையை நோக்கி சாய்ந்து வருகிறது. சாய்ந்துள்ள சுற்றுச் சுவர் எந்நேரத்திலும் உடைந்து விழும் சூழ்நிலையில் உள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், அச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெருமின் விளக்குகள், தற்போது ஒன்று கூட எரியாததால், அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, விபத்து ஏற்படும் முன், சேதமடைந்த சுற்றுச் சுவரை அகற்றிவிட்டு, புதிதாக சுவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement