Advertisement

மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு : அலிகார் பல்கலை உத்தரவு

அலிகார்: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, அலிகார் முஸ்லிம் பல்கலையில், விடுதி மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது,

உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.கடந்த, 1875ல், அலிகாரில், ஆங்கிலோ - இஸ்லாமிய கல்லுாரியை, சர் சையது அகமது கான் என்பவர் துவக்கினார். பின், 1920ல் இந்த கல்லுாரி, அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, இந்த பல்கலையில் முதலாமாண்டு படிப்புகளில் சேர்ந்து, விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: விடுதியில் தங்கி படிக்கும் அனைத்து மாணவர்களும், தங்கள் அறைகளை விட்டு வெளியில் வரும்போது, அரைக்கால் சட்டை, குர்தா - பைஜாமா, ஹவாய் செருப்பு போன்றவற்றை அணிய கூடாது. மாணவர்கள், பேன்ட் - ஷர்ட், கறுப்பு ஷெர்வானி, செருப்பு அல்லது ஷூ அணிந்து வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பல்கலையின் இந்த புதிய கட்டுப்பாடு, விடுதி மாணவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement