Advertisement

ராகிங் மாணவர்கள் விடுதியில் நீக்கம்

வேலுார்: &'ராகிங்&' செய்த கல்லுாரி மாணவர்கள், ஆறு பேர், விடுதியில் இருந்து நீக்கப்பட்டனர்.

வேலுார், தொரப்பாடியில், முத்துரங்கம் அரசு கலைக் கல்லுாரி உள்ளது. இங்கு, பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கும் மாணவர்களை, மூன்றாமாண்டு மாணவர்கள் சிலர், நிர்வாணமாக நிற்க வைத்து, நடனமாட செய்து, அதை மொபைலில் படம் எடுத்து, ராகிங் செய்ததாக புகார் வந்தது.கல்லுாரி நிர்வாகத்தின் விசாரணையில், ராகிங் செய்த மாணவர்கள், வேலுார் அரசு ஆதிதிராவிடர் நல கல்லுாரி விடுதியில் தங்கி படித்து வருவது தெரிந்தது.ராகிங் செய்த, 19 வயதுடைய, ஆறு மாணவர்களை, 12 நாட்களுக்கு, &'சஸ்பெண்ட்&' செய்து, கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், விடுதியில் தங்கி படித்த மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டதாலும், பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், இவர்களுக்கும் மோதல் நடக்க வாய்ப்புள்ளது.அதனால், இவர்களை விடுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்தும், விடுதியில் நுழைய தடை விதித்தும், வேலுார் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், கஜேந்திரன், நேற்று உத்தரவிட்டார்.இதையடுத்து, ஆறு மாணவர்கள், விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.&'ராகிங் செய்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப் படும்&' என, பாகாயம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement