Advertisement

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருப்பத்துார் இந்திராகாந்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளித் தாளாளர் ஏகாம்பாள் தலைமை வகித்தார். முதல்வர் சசிகலா தேவி வரவேற்றார். டி.இ.ஓ. மாரிமுத்து துவக்கி வைத்தார். குன்றக்குடி மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய தலைவர் பேராசிரியர் செந்துார்குமரன் அறிவியல் கண்காட்சியைப் பார்வையிட்டு சிறப்புரையாற்றினார்.நிறுவனர் கணேசன் வாழ்த்துரை வழங்கினார்.
திருக்குறள் ஒப்புவித்தல், பழமொழி சொல்லுதல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
அறிவியல் கண்காட்சியில் லிப்ட், ஏ.டி.எம் மெஷின், பேட்டரியில் ஓடக்கூடிய வாகனங்கள், எரிமலை, தண்ணீர் நிறையும் அலாரம், டேபிள் பேன், செல்போன் டவர், வெற்றிடக்குழாய், ஏர்கூலர், மோட்டார் பைக்இ விண்ட் மில், ஜெசிபி, உலக உருண்டை, பொட்டட்டோ லைட், மேன்பவர், ஜெனரேட்டா, வாட்டர் லிப்ட் மற்றும் 100க்மேற்பட்ட அறிவியல் படைப்புகளை மாணவர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.ஆசிரியை பாக்கியலெட்சுமி நன்றி கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement